யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் திருச்சி விமான

25-67e93a4d03c75.jpeg

47 ஆண்டுகளுக்குப் பின்னர் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்றைய தினம் (30) முதல் ஆரம்பமாகியுள்ளது.47 ஆண்டுகளுக்குப் பின் விமான சேவை

திருச்சியில் இருந்து மதியம் புறப்பட்ட விமானம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த வேளை, விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.நிகழ்வில் இந்திய துணைத்தூதரகர் சாய் முரளி உள்ளிட்ட துணைத்தூதராக அதிகாரிகள் , விமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். குறித்த விமான சேவையானது தினசரி மதியம் 1.25 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு , 2.25 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடையும்.யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு , திருச்சியை மாலை 4 மணியளவில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து சிங்கப்பூர் பயணிக்க விரும்புவோர் , திருச்சி சென்ற திருச்சி ஊடாக சிங்கப்பூர் பயணிக்க கூடியவாறான விமான சேவை திட்டமிடப்பட்டுள்ளமையால் , கொழும்பு சென்று சிங்கப்பூர் செல்வதற்கான நேர விரயம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விமான கட்டணம்
திருச்சி- யாழ்ப்பாணம் இடையேயான விமான கட்டணமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல மட்டும் ரூ5,900 முதல் ரூ6,400 வரை மட்டுமே.இன்றையதினம் சரியாக பிற்பகல் 02.02 மணிக்கு பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில் 27 பணிகள் வருகை தந்தனர்.பலாலியிலிருந்து மீண்டும் 36 பயணிகளுடன் 3.00 மணியளவில் விமானம் திருச்சியை நோக்கிப் புறப்பட்டது.இதன் போது யாழ்ப்பாண இந்திய துணை தூதுவர் சாய் முரளி தலையிலான குழுவினர் கேக் வெட்டி விமானிகளுடன் புதிய விமான பயணத்தினை கொண்டாடினர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *