மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதிகள் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படாமல் அவைகள் மேலதிக ஒப்புதலுக்காக வழங்கப்பட்டதற்காக தனது கடுமையான ஆட்சேபனையையும் எதிர்ப்பையும்
தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இ. சிறிநாத் அவர்கள், இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதிப் பங்கீடுகளின் போது சக பாராளுமன்ற உறுப்பினர்களையும், குறிப்பாக தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடைய கருத்துக்களையும், அவர்களுடைய அபிவிருத்தி முன்மொழிவுகளையும் உள்ளடக்கி இந்த நிதி பங்கீடானது எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தனது கருத்தை பதிவு செய்ததோடு, அக்கூட்டத்தில் பின்வரும் விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டன.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தாதியர்களின் தெரிவு, மேலும் கடந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் இதுவரை காலமும் எவ்வாறு பின் தொடரப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் கிடைக்கப்பெற்றனவா என அது சம்பந்தமான கலந்துரையாடல்