பழைய உறவு முறிந்துவிட்டது கனடா பிரதமர் மார்க் கார்னி

download-81.jpeg

அமெரிக்காவுடன் பழைய உறவு முறிந்துவிட்டது ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பு உலக சந்தையில் வர்த்தகப் போர் ஏற்படும் சூழலை உருவாக்கி இருக்கிறது. கார்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பதை கண்டித்து பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந் நிலையில், அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையிலான ஆழமான பொருளாதார, பாதுகாப்பு மற்றும் இராணுவ உறவுகளின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

“நமது பொருளாதாரங்களின் ஆழமான ஒருங்கிணைப்பு மற்றும் இறுக்கமான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பின் அடிப்படையில் அமெரிக்காவுடன் நாங்கள் கொண்டிருந்த பழைய உறவு முடிந்துவிட்டது. சமீபத்திய வரி நடவடிக்கைகளுக்கு எங்கள் பதில் போராடுவது, பாதுகாப்பது, கட்டியெழுப்புவது,” என்று மார்க் கார்னி கூறினார்.

“அமெரிக்காவில் அதிகபட்ச தாக்கத்தையும் கனடாவில் குறைந்தபட்ச தாக்கங்களையும் ஏற்படுத்தும் வர்த்தக நடவடிக்கைகளுடன் நாங்கள் அமெரிக்க வரிகளை எதிர்த்துப் போராடுவோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

அமெரிக்காவில் வாகன இறக்குமதி வரி அடுத்த வாரம் அமலுக்கு வரவுள்ள நிலையில், ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கனேடிய வாகன தொழிலுக்கு பேரழிவை ஏற்படுத்தும்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *