பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.இந்தியாவின் உதவியை எம்மால் மறக்க முடியாது

download-5-41.jpeg

இந்தியாவின் உதவியை எம்மால் மறக்க முடியாது – பந்துல ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட பிறகு, வேறு எந்த தலைவரும் செய்ய முடியாத ஒரு உறுதிமொழியை அவர் செய்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

ராஜகிரியவில் உள்ள இலங்கை மத்திய வங்கியில் நேற்று (25) பிற்பகல் நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுதிய “இலங்கை பொருளாதாரத்தின் ஐந்து ஆயுதங்கள்” என்ற புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

சர்வதேச நாணய நிதியத்துடன் விரிவான கடன் ஒப்பந்தத்தை எட்டிய பிறகு, 2028 வரை வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த மாட்டோம் என்ற ஒப்பந்தத்தின் காரணமாகவே இன்றும் நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.

இலங்கையின் வரலாற்றில், சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் இரண்டு முறை பின்னோக்கிச் சென்றுள்ளது. பொருளாதாரம் முதன் முதலில் 2001 இல் மந்தநிலையைச் சந்தித்தது. 2022 இல் பொருளாதாரம் சரிந்தது, இது வரலாற்றில் மிக மோசமானது.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட பிறகு, வேறு எந்த தலைவரும் செய்ய முடியாத ஒரு உறுதிமொழியை அவர் செய்தார். இந்தியா கிட்டத்தட்ட நான்கு மில்லியன் டாலர்களை வழங்கியிருக்காவிட்டால், எண்ணெய், மருந்துகள், உணவு, உரங்கள் மற்றும் ரசாயனங்களை இறக்குமதி செய்ய முடியாது…

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *