இந்த ஆண்டில் முதல் சூரிய கிரகணம் வரும் 29ம் தேதி தெரிய இருக்கிறது

இந்த ஆண்டில் முதல் சூரிய கிரகணம் வரும் 29ம் தேதி தெரிய இருக்கிறது. ஆனால் இது முழு சூரிய கிரகணமாக அல்லாமல், பகுதி சூரிய கிரகணமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இதனை இந்தியாவிலிருந்து பார்க்க முடியுமா? எவ்வளவு நேரம் தெரியும்? எங்கு எப்படி பார்ப்பது? உள்ளிட்ட கேள்விகளுக்கு இந்த செய்தி விடையளிக்கிறது.சூரியன்-நிலவு-பூமி ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் தோன்றுகிறது. இந்த நேரத்தில் சூரியனை நிலவு மறைத்து விடுகிறது. சூரியனை விட நிலவு 15 மடங்கு சிறியதுதான். ஆனால், நிலவுக்கும் சூரியனுக்கும் இடையே 15 மடங்கு தொலைவு இருப்பதால் இரண்டும் ஒரே சைஸ் போல தெரியும். எனவே, நிலவு சூரினை மறைக்கும் அளவுக்கு போதுமானதாக இருக்கும். இப்படி நடக்கும்போது திடீரென சூரியனின் வெளிச்சம் குறையும். மார்ச் 29ம் தேதி இந்த நிகழ்வுதான் நடக்கப்போகிறது. ஆனால், இந்த முறை முழு சூரிய கிரகணம் நடக்காது. அதாவது, நிலவு சூரியனை முழுமையாக மறைத்துவிடாது. மாறாக சிறியதாக, பாதியளவுக்கு மட்டுமே மறைக்கும். இதனை பகுதி சூரிய கிரகணம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். சுமார் 80 கோடி மக்கள் இதனை பார்க்க முடியும். ஆனால் இந்தியாவில் இது தெரியாது.வட அமெரிக்கா, கனடா, ஐரோப்பாவின் சில பகுதிகள், மற்றும் ஆர்க்டிக் உள்ளிட்ட உலகின் சில பகுதிகளில் தெரியும். சிம்பிளாக சொல்வதெனில் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில்தான் இது தெரியும். கிரணம் உச்சியை அடையும்போது இந்தியாவில் சூரியன் ஏறத்தாழ மறைந்திருக்கும்

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *