தென் கொரியாவில் 5 நாட்களை கடந்து கொளுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயால் 18 பேர் பலி

download-3-49.jpeg

தென் கொரியாவில் 5 நாட்களை கடந்து கொளுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயால் 18 பேர் பலியாகி உள்ளனர்.

தென் கொரியாவின் சான்சியாங்க் பிராந்தியத்தில் நிலவும் மோசமான வறண்ட வானிலை காரணமாக காட்டுத்தீ பற்றியது. 5 நாட்களை கடந்தும் தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. உய்சங் பகுதியில் 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த புத்தர் கோவில் தீயில் சிக்கி முழுமையாக சேதம் அடைந்தது.

பலத்த காற்று மற்றும் கடும் வெப்பம் காரணமாக, தீ கட்டுக்கடங்காமல் எரிகிறது. காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காட்டுத் தீயை கட்டுப்படுத்த அதிகாரிகள் முயற்சித்த வரும் அதே வேளையில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அண்டாங் உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த 10,000க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் களத்தில் இறங்கி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்டாங் நகரம் மற்றும் பிற தென்கிழக்கு நகரங்களில் உள்ள பொதுமக்கள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உய்சிங் கவுன்டியின் மலைப் பகுதியில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததாகவும், அதிலிருந்த விமானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானதாகவும் தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *