மட்டக்களப்பில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித்திட்டம்

486674579_976034451340923_6615216695198457845_n-1.jpg

மட்டக்களப்பில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித்திட்டம் தொடர்பான பயிற்சி நெறி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித்திட்டம் தொடர்பான பயிற்சி நெறியானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (26) இடம் பெற்றது.

கிராமிய அபிவிருத்தி சமூகப்பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கிராமிய அபிவிருத்தி பணியகத்தின் வழிகாட்டுதலின் கீழ் கிராமிய அபிவிருத்தித்திட்டம் தயாரிப்பதற்கு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் கடமையாற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்களுக்கான ஒரு நாள் பயிற்சிநெறி இதன் போது வழங்கப்பட்டது.

ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் இதன் போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநீதன், பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *