4 பேருக்கு அதிரடி தடை விதித்த பிரித்தானியா – சொத்துக்கள் பறிமுதல்

download-9-18.jpeg

கருணா உட்பட 4 பேருக்கு அதிரடி தடை விதித்த பிரித்தானியா – சொத்துக்கள் பறிமுதல் இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய நபர்கள் மீது பிரித்தானியா இன்று (24) தடைகளை விதித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது சட்டவிரோத கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நான்கு நபர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவில் முன்னாள் இராணுவத் தளபதிகளான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ஃப்ளீட் வசந்த கரன்னாகொட ஆகியோர் அடங்குவர்.

அதேபோல், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பணியாற்றிய, விடுதலைப் புலிகளின் கிழக்கு ஆயுதப் பிரிவின் தலைவராக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மானும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, அவர்கள் பிரித்தானியாவுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் அவர்கள் வைத்திருக்கும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *