25 March 2025 Tuesday. Pothikai.fm இன்றைய_ராசிபலன்

download-6-34.jpeg

25 March 2025 Tuesday. Pothikai.fm
இன்றைய_ராசிபலன்
செவ்வாய்க்கிழமை)
💐மேஷம்: ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

💐ரிஷபம்

ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். அசைவ கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வீண் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

💐மிதுனம்

மிதுனம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.

💐கடகம்

கடகம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி முழுமையாக உங்களை நம்புவார். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

💐சிம்மம்

சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. மகிழ்ச்சியான நாள்.

💐கன்னி

கன்னி: சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். உடல்நலம் பாதிக்கும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவு எடுக்க பாருங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

💐துலாம்

துலாம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

💐விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

💐தனுசு

தனுசு: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். பழைய பிரச்சினைகளில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.

💐மகரம்

மகரம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

💐கும்பம்

கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். விருந்தினரின் வருகை உண்டு. வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

💐மீனம்

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

தேதி
Date 11 – பங்குனி – குரோதி
செவ்வாய்
இன்று
Today சர்வ ஏகாதசி
திருவோண விரதம்
நல்ல நேரம்
Nalla Neram 08:15 – 09:00 கா / AM
04:30 – 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
Gowri Nalla Neram 10:30 – 11:30 கா / AM
07:30 – 08:30 மா / PM
இராகு காலம்
Raahu Kaalam 03.00 – 04.30
எமகண்டம்
Yemagandam 09.00 – 10.30
குளிகை
Kuligai 12.00 – 01.30
சூலம்
Soolam வடக்கு
Vadakku
பரிகாரம்
Parigaram பால்
Paal
சந்திராஷ்டமம்
Chandirashtamam திருவாதிரை புனர்பூசம்
நாள்
Naal மேல் நோக்கு நாள்
லக்னம்
Lagnam மீன லக்னம் இருப்பு நாழிகை 02 வினாடி 50
சூரிய உதயம்
Sun Rise 06:19 கா / AM
ஸ்ரார்த திதி
Sraardha Thithi ஏகாதசி
திதி
Thithi இன்று அதிகாலை 01:22 AM வரை தசமி பின்பு ஏகாதசி
நட்சத்திரம்
Star இன்று அதிகாலை 12:57 AM வரை உத்திராடம் பின்பு திருவோணம்
சுபகாரியம்
Subakariyam சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *