24 March 2025 Monday. Pothikai.fm மேஷ ராசி நண்பர்களே,உற்சாகமாக காணப்படுவீர்கள்

485936509_974513538159681_718381944998851775_n.jpg

24 March 2025 Monday. Pothikai.fm
*#தோற்றம்*

1775 – முத்துசுவாமி தீட்சிதர், கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1835)

1884 – பீட்டர் டெபாய், நோபல் பரிசு பெற்ற டச்சு-அமெரிக்க இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1966)

1893 – வால்டேர் பாடே, ஜெருமானிய வானியலாளர் (இ. 1960)

1903 – அடால்ஃப் புடேனண்ட்ட், நோபல் பரிசு பெற்ற ஜெருமானிய வேதியியலாளர் (இ. 1995)

1905 – பி. எஸ். இராமையா, தமிழக எழுத்தாளர் (இ. 1983)

1922 – டி. எம். சௌந்தரராஜன், தமிழகப் பின்னணிப் பாடகர்.

1930 – நீர்வை பொன்னையன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2020)

1932 – கே. ஏ. கிருஷ்ணசாமி, தமிழக அரசியல்வாதி (இ. 2010)

1943 – ரகுநாத் மகபத்ர, இந்திய சிற்ப, கட்டடக் கலைஞர்.

1949 – ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் 13வது பிரதமர்.

*#மறைவு*

1965 – தமிழ்ஒளி, புதுவைக் கவிஞர் (பி. 1924)

1988 – சீர்காழி எஸ். கோவிந்தராஜன், தமிழக கர்நாடக, திரையிசைப் பாடகர் (பி. 1933)

*#சிறப்பு_நாள்*

மர நாள் (உகாண்டா)

உலக காச நோய் நாள்.

சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த நாள்.
________________________________

*#இன்றைய_ராசிபலன்கள்*
(24-03-2025.திங்கட்க்கிழமை)

💐மேஷம்

மேஷ ராசி நண்பர்களே,உற்சாகமாக காணப்படுவீர்கள். வெளியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ பலம் கூடும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்யோகத்தில் கவனம் தேவை.

💐ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே, உங்கள் செயல் திறன் அதிகரிக்கும்.வெளிவட்டார தொடர்பு விரிவடையும். எதிரிகளின் பலம் பாதியாக குறையும். பிரிந்துசென்ற தம்பதியினர் ஒன்று சேருவர். தொழில், வியாபாரம் விருத்தி பெரும்.மதியம் 12:35 வரை சந்திராஷ்டமம் உள்ளது கவனம்.

💐மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே,மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும்.குழப்பம் தீரும். குடும்பத்தில் இழந்த நிம்மதி திரும்ப கிடைக்கும். பழைய சொந்த, பந்தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.மதியம் 12:35 மணி முதல் சந்திராஷ்டமம் தொடக்குகிறது அடுத்த இரண்டு தினங்களுக்கு கவனம் தேவை.

💐கடகம்

கடக ராசி நண்ர்களே, குடும்பத்திற்கு நன்மையான விஷயங்கள் நடக்கும். மறைமுக எதிரிகள் விலகுவார்கள்.எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். மறைமுக பிரச்சனைகள் நீங்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

💐சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்திற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். பண தேவைகள் பூர்த்தியாகும் .
சாட்சி கையெழுத்து போட வேண்டாம். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

💐கன்னி

கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் திருப்திகரமான சூழல் நிலவும். திட்டமிட்ட காரியம் கைகூடும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். புது தொழில் யோகம் அமையும்

💐துலாம்

துலாம் ராசி நண்பர்களே,அலைச்சல் அதிகமாக காணப்படும். குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள் வரும். ஆன்மீக நாட்டம் கூடும். முன் கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்

💐விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே, எதிர்பாராத பயணங்களால் நல்ல திருப்பம் ஏற்படும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

💐தனுசு

தனுசு ராசி நண்பர்களே, உறவினர்கள் அன்பு தொல்லை அதிகரிக்கும். கையில் எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும். பண வரவு இருக்கும். உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும்.
தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.

💐மகரம்

மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுக வாழ்வு ஏற்படும்.நிலுவையில் இருந்த பணிகள் நிறைவு பெறும். பெற்றோர்கள் கேட்டதை செய்து தர இயலும். புது நண்பர்களால் சில தொந்தரவுகள் வரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

💐கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, முக்கிய நிகழ்வுகள் நினைவுக்கு வரும். உடல் நலம் சீராகும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.பகைவர்கள் அடிபணிந்து பணிந்து போவர். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.

💐மீனம்

மீன ராசி நண்பர்களே, யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.

🥀Astro.V.Palaniappan 🥀

🌿#Gobichettipalayam 🌿

🌹9942162388🌹

தேதி
Date 10 – பங்குனி – குரோதி
திங்கள்
நல்ல நேரம்
Nalla Neram 06:30 – 07:30 கா / AM
04:30 – 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
Gowri Nalla Neram 01:30 – 02:30 கா / AM
07:30 – 08:30 மா / PM
இராகு காலம்
Raahu Kaalam 07.30 – 09.00
எமகண்டம்
Yemagandam 10.30 – 12.00
குளிகை
Kuligai 01.30 – 03.00
சூலம்
Soolam கிழக்கு
Kilakku
பரிகாரம்
Parigaram தயிர்
Thayir
சந்திராஷ்டமம்
Chandirashtamam மிருகசீரிடம் திருவாதிரை
நாள்
Naal மேல் நோக்கு நாள்
லக்னம்
Lagnam மீன லக்னம் இருப்பு நாழிகை 02 வினாடி 58
சூரிய உதயம்
Sun Rise 06:20 கா / AM
ஸ்ரார்த திதி
Sraardha Thithi தசமி
திதி
Thithi இன்று அதிகாலை 01:48 AM வரை நவமி பின்பு தசமி
நட்சத்திரம்
Star இன்று அதிகாலை 12:43 AM வரை பூராடம் பின்பு உத்திராடம்
சுபகாரியம்
Subakariyam நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள்

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *