தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர்களே இல்லை” – கனிமொழி
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி கற்பிக்க 86 ஆசிரியர்களும், சமஸ்கிருதம் கற்பிக்க 65 ஆசிரியர்களும் இருப்பதாக மத்திய அரசு அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி கற்பிக்க 86 ஆசிரியர்களும், சமஸ்கிருதம் கற்பிக்க 65 ஆசிரியர்களும் இருப்பதாக
�
மத்திய அரசு அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியோ, சமஸ்கிருதமோ தேசிய மொழி என்று வரையறுக்கப்பட்டுள்ளதா அல்லது பாரதிய ஜனதா கட்டமைக்க விரும்பும் தேசியம் என்பது இதுதானா என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
�
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் வழியாக எந்த தாய்மொழியைக் காக்கிறீர்கள் அல்லது கற்றுக் கொடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள கனிமொழி, மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இப்படி இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பதைத்தான் காலம் காலமாக திமுக எதிர்க்கிறது என்று கனிமொழி சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து அவரை தொலைபேசி வழியே புதிய தலைமுறை தொடர்பு கொண்டு கேட்டபோது தமிழ்நாட்டிலும், பிற மாநிலங்களிலும் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழியே கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
