மக்களுக்கு பணம் வழங்கினால் பதவி பறிபோகும் என பெஃப்ரல் அமைப்பு எச்சரிக்கை

தேர்தல் பிரசாரத்தின்போது மக்களுக்கு பணம் வழங்கினால் பதவி பறிபோகும் என பெஃப்ரல் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தைப் பின்பற்றி தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட வேண்டியது சகல வேட்பாளர்களினதும் பொறுப்பாகும் என பெஃப்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.தேர்தலுக்காக கையூட்டல்
எனவே, தங்களது பிரதேசங்களில் நிலவும் பிரச்சினைகள் தீர்ப்பதற்கு தாம் தகுதியானவர் என வேட்பாளர் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், ஊழல் இன்றி பொது சொத்துக்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படக்கூடியவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.தேர்தலுக்காக கையூட்டல் வழங்கும் வேட்பாளர் ஒருவர், தேர்தல்களில் வெற்றி பெற்றதன் பின்னர் அந்த பணத்தை வசூலிப்பதற்காக செயற்படுவார் என்ற விம்பத்தை மக்களிடையே தோற்றுவிக்கும்.

அதேசமயம் தேர்தலில் வெற்றிபெற்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினராகத் தெரிவான ஒருவர், பிரசாரத்தின்போது, பொதுமக்களுக்குப் பணம் வழங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்படுமாயின் அவர் தமது பதவியை இழக்க நேரிடும் எனவும் பெப்பரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *