நெடும்போ பதவியேற்பு நமீபியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக

download-1-57.jpeg

நமீபியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக நெடும்போ பதவியேற்பு ஆபிரிக்க நாடான நமீபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதில் தென்மேற்கு ஆபிரிக்க மக்கள் அமைப்பு கட்சி சார்பில் போட்டியிட்ட நெடும்போ நந்தி தைத்வா (வயது 72) 58 சதவீதம் வாக்குகள் பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட மாற்றத்திற்கான சுதந்திர தேசபக்தர்கள் கட்சி 26 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

இந்தநிலையில் தலைநகர் விண்ட்ஹோயிக்கில் உள்ள நாடாளுமன்றத்தில் அவரது பதவியேற்பு விழா நடைபெற்றது. இதன்போது, முன்னாள் அதிபர் நங்கோலா பும்பா அதிகாரத்தை அவரிடம் ஒப்படைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தான்சானியா அதிபர் சாமியா சுலுஹூ ஹாசன் உள்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம் நாட்டின் முதல் பெண் அதிபர் மற்றும் ஆபிரிக்காவின் 2-வது பெண் அதிபர் என்ற பெருமையை நெடும்போ பெற்றுள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *