வடகிழக்கு தமிழ் உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். தெற்கில் இடம்பெறும் அரசியல்வாதிகளின் கைதுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இவைகளை வேடிக்கை பார்க்கப் போகிறோமா அனுராவின் இந்த ஐந்து ஆண்டு காலம் வரைக்கும் அனுரா ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் ஆகியும் இன்னும் இதுவரை தமிழர்களின்
�
தீர்வு குறித்து அவரும் அவருடைய சகாக்களும் வாய் திறக்கவில்லை இதற்கு பின்னணி என்ன தமிழர்களின் தீர்வு விடியத்தில் எதுவும் நடக்கப் போவதில்லை அனுரா ஆட்சிக்கு வந்து இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் தமிழர்களுக்காக எடுக்கவில்லை. ராஜபக்ச அரசும் அனுரகுமார அரசும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்கள். ஜனாதிபதி அனுரகுமார பல இடங்களில்
�
தெரிவித்திருக்கிறார் இனவாதத்துக்கு ஒருபோதும் இடம் அளிக்கப் போவதில்லை என்று ஆனால் இன்று யாழ்ப்பாணத்தில் விகாரை கட்டிய இடத்தில் மற்றுமொரு கட்டிட திறப்பு விழா எப்படி இடம் பெற்றது. இன்றைய திறப்பு விழா சம்பவம் ஜனாதிபதி அவர்களுக்கு தெரியாமல் நடக்காது எனவே. ஜனாதிபதி மறைமுகமாக செயல்பட்டு வருவது அப்பட்டமாக தெரியவந்துள்ளது. எனவே உறவுகளே எங்களுடைய தீர்வு விடயத்தில் யாருக்கு நாங்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது எமது இனத்தை நாங்களே காக்க வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம். இவை அனைத்தும் இன்றைய தினம் செல்வராஜ் கஜேந்திரன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போது. மீடியாக்களுக்கு அவர் அளித்த செவ்வியில் இருந்து தொகுக்கப்பட்ட செய்தி இது.
