நீதிபதி வீட்டில் எரிந்த ரூபாய் நோட்டுகள்; வீடியோவை வெளியிட்டது சுப்ரீம் கோர்ட்

download-6-33.jpeg

நீதிபதி வீட்டில் எரிந்த ரூபாய் நோட்டுகள்; வீடியோவை வெளியிட்டது சுப்ரீம் கோர்ட் டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில், கத்தை கத்தையான ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்த நிலையில் இருக்கும் வீடியோ சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, 56, டில்லி துக்ளக் சாலையில், நீதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார். இவரது வீட்டில், கடந்த 14ம் தேதி இரவு 11:30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது நீதிபதி வீட்டில் இல்லை.

அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்களும், டில்லி போலீசும் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அப்போது அவரது வீட்டில் உள்ள ஒரு அறையில், சாக்கு மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணக்குவியல்கள் இருந்ததாக தகவல் வெளியானது. அதில், கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் இருந்ததாகவும், சில கோடி ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமைத்துள்ளார். அதுவரை, யஷ்வந்த் சர்மாவுக்கு எந்த பணியும் ஒதுக்க வேண்டாம் என்றும் டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளார். யஸ்வந்த் வர்மா வீட்டில், கத்தை கத்தையான ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்த நிலையில் இருக்கும் வீடியோ சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அளித்த அறிக்கையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கத்துடன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.தீ விபத்து தொடர்பாக நீதிபதி யஸ்வந்த் வர்மா கூறியதாவது: தீப்பிடித்த அறை பூட்டப்படாமல் எப்போது திறந்தே இருக்கும். வீட்டுப் பணியாளர்கள், வீடு பராமரிக்கும் பொதுப் பணி துறை பணியாளர்கள் உள்பட எவரும் அங்கு செல்ல முடியும்.

அங்கு பழைய படுக்கை, உடைந்த பர்னிச்சர்கள் போன்ற பொருட்கள் இருந்தன. எனது இல்லத்தில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

என் மீது சுமத்தப்படும் இந்தக் குற்றச்சாட்டு அபத்தமானது. என்னை சிக்க வைக்க சதி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *