தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துவிட்டது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

download-3-42.jpeg

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துவிட்டது; மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கையில் இந்தி மொழியை கட்டாயம் படித்தாக வேண்டும் என திணிக்கவே இல்லை.. அப்படி இருந்தால் மன்னிப்பு கேட்க தயார் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் நேற்று கூறியதாவது: இந்தியா கூட்டணி தற்போது வலுவிழந்துவிட்டது.

காங்கிரஸ் கட்சியில் திறமையான தலைவர்கள் இல்லை; அவர்களால் கூட்டணியை தலைமையேற்று நடத்த முடியவில்லை. இப்படியான நிலை தொடர்ந்தால் திமுகவும் காங்கிரஸும்தான் இந்தியா கூட்டணியில் இருக்கும். இதனால்தான் இருக்கிற கட்சிகளை தக்க வைக்க திமுகவும் காங்கிரஸும் முயற்சிக்கின்றன.தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, மக்களுக்கு என்ன செய்தோம் என்பதை அடுத்த ஆண்டு தேர்தலின் போது சொல்ல முடியாது; தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது.

இதனை எல்லாம் மறைக்கத்தான் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசுகிறது திமுக. தொகுதி மறுவரையறை செய்வதற்கு முன்னதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்ப்பட வேண்டும்; இதற்கு பின்னர் தொகுதி மறுவரையறைக்கான ஆணையம் அமைக்க வேண்டும்; அந்த ஆணையம்தான் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று கருத்து கேட்கும்; இதற்கு ஓராண்டுக்கும் மேல் ஆகும். அப்படி ஆணையம் வந்து கேட்கும் போது திமுகவும் தமது கருத்தை சொல்லலாமே தவிர தேவையில்லாமல் பிரச்சனையாக்கக் கூடாது. தமிழகத்தில் டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளது. இதனை

மறைக்கப் பார்க்கிறது திமுக. புதிய தேசிய கல்விக் கொள்கையை திமுகவினர் படித்து பார்க்கவே இல்லை; அந்த புதிய கல்வி கொள்கையில் இந்தி மொழியை கட்டாயமாக படித்துதான் ஆக வேண்டும் என்று எங்கே சொல்லப்பட்டுள்ளது? அப்படி சொல்லி இருந்தால் மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்கிறேன்.நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் இருந்தே இந்தி மொழி திணிப்பு பற்றி பொய்யான பிரசாரம் செய்து வருகின்றனர். திமுக, தமிழ் மொழியை வளர்க்கவில்லை. இதனை மறைக்கத்தான்

இந்தி மொழியை திணிக்கின்றனர் என பொய் சொல்கிறது திமுக. தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுகவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். முதல்வர் ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர் ஒருவர், அந்த நபருடன் சேர்ந்து திரைப்படமும் எடுத்துள்ளார். இந்த விவகாரம் எல்லாம் 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பேசுவோம். இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *