2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் முதல் இதுவரையான காலப்பகுதி வரையில் நாடு முழுவதும் 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 22 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நாடு முழுவதும் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் சாராம்சம் பின்வருமாறு
ஜனவரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்
ஜனவரி 04 – வெலிகம பொலிஸ் பிரிவின் கப்பரத்தொட்ட, வல்லிவெல பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த 05 பேரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
ஜனவரி 07 – கல்கிஸ்ஸை, வட்டரப்பல குதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் 36 மற்றும் 20 வயதுடைய அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
ஜனவரி 09 – அஹுங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சுடப்பட்ட நபர் லோக்கு பெட்டி என்ற குற்ற கும்பல் உறுப்பினரின் உறவினர் என்று பொலிஸார் பின்னர் தெரிவித்தனர்.
ஜனவரி 13 – தெவினுவர தல்பாவில பகுதியில் உள்ள கருவாடு வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து அவரது வீட்டின் முன் அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஜனவரி 15 – அன்று அதிகாலையில் தொடங்கொடவின் வில்பத பகுதியில் ஒரு வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனவரி 16 – மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்திருந்த இரண்டு பேரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டனர்.அதே நாளில், கொஹுவல பொலிஸ் பிரிவின் களுபோவில பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கார் பாகங்கள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஜனவரி 19 – கல்கிஸ்ஸை சிறிபுர பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
24 வயதுடைய ஒருவரும் 36 வயதுடைய ஒருவரும் சம்பவத்தில் பலியாகினர்.
கொலை நடந்த சுமார் 15 நிமிடங்களுக்குள், துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய்தனர்.
