கட்சி வேறுபாடுகளை களைந்து ஒன்றாக இணைந்து’ – கூட்டு நடவடிக்கை குழுவில் அரசியல் தலைவர்கள் சொன்னதென்ன?
�
கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்திற்கு வந்த தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தார்.காலை 10.30 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த மான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்திற்கு வந்த தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தார். இக்கூட்டத்தை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தொகுத்து வழங்கினார்.முதலில், வரவேற்புரை ஆற்றிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மக்கள்தொகை அடிப்படையில்
�
தொகுதி மறு சீரமைப்பை ஏற்றுக் கொள்ள முடியாது போன்ற கருத்துக்களை முன்வைத்து தனது உரையை தொடங்கினார்.பின்னர் பேசிய, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்:ஒன்றிய அரசின் மாநிலங்களூடன் அர்த்தமுள்ள உரையாடலை தொடங்க வேண்டும். எண்ணிக்கை மட்டுமில்லை இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம்; தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை . பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம்; மாநிலங்களோடு மத்திய அரசு அத்தமுள்ள உரையாடல்களை தொடங்கவேண்டும்.தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி:
�
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தி, சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனையே தொகுதி மறுவரையறை; கட்சி வேறுபாடுகளை களைந்து ஒன்றாக இணைந்து இதை எதிர்த்து போராடுவோம் டெல்லியிலும் இதற்குரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்; பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை; அவர்கள் நினைப்பதையே முடிவாக எடுக்கிறார்கள் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,நாட்டின் முன்னேற்றத்துக்காகவே மக்கள்தொகை கட்டுப்பாடு இருக்க வேண்டும்; மக்கள்தொகையை
�
கட்டுப்படுத்தியதற்காக, நமக்கு தரப்பட்ட பரிசுதான் இந்த தொகுதி மறுசீரமைப்பு”கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் காணொளி காட்சி மூலம், ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உரை:மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு செய்யப்படும் அநீதி இது; இதை உணர்ந்து, பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான கூட்டம் தற்போது கூட்டப்பட்டுள்ளது 2026 மக்கள் தொகையின்படி தொகுதிகள் சீரமைக்கப்பட்டால், மக்களவை – சட்டப்பேரவை தொகுதிகளை ஒடிசா இழக்கும்; ஒடிசா மக்களின் நலன் காக்க பிஜு ஜனதாதாளம் போராடும்” என்றார்.
