மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கௌரவம் ! ! !
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் விசேட இப்தார் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் ( 22 ) நடைபெற்றது.
அகில இலங்கை சமாதான நீதிவானும் சிரேஸ்ட ஊடகவியலாளரும் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவருமாகிய
“சாமஸ்ரீ தேசமான்ய”
உ. உதயகாந்த் (JP) தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜெஸ்டினா யூலேகா முரளிதரன் கலந்து கொண்டார்.
இந் நிகழ்விற்கு ஆன்மீக அதிதிகளாக
மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ வீ.கே.சிவபாலன் குருக்கள்,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ். ஏ.எம்.எம்.தௌபீக் BSc Eng (Hons) , பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க்.எச்.எம்.எம்.இல்ஹாம் பலாஹி BA, அருட்தந்தை ஏ.யேசுதாஸ் அடிகளாரும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்விற்கு விசேட அதிதிகளாக காத்தான்குடி பிரதேச செயலகத்தின்
பிரதேச செயலாளர்
திருமதி.நிஹாறா மௌஜூத் (SLAS), காத்தான்குடி பிரதேச செயலகத்தின்
உதவிப் பிரதேச செயலாளர், காத்தான்குடி நகர சபையின் செயலாளர் திருமதி றிப்கா ஷபீன்,காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின்
பொறுப்பதிகாரி,மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி
வடிவேல் ஜீவானந்தன், மஞ்சந்தொடுவாய் மட்/ மம/முகைதீன் வித்தியாலயத்தின் அதிபர் எச்.எம்.தாஜஹான் போன்றோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அளப்பெரியசேவையாற்றி வரும் மாவட்ட அரசாங்க அதிபருக்கு பொன்னாடை போர்த்தி,மலர் அணிவித்து,நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதுடன் , சங்கத்தினால் வெளியிடப்பட்ட நீதியின் நிரல் நூலின் பிரதியும் வழங்கி வைக்கப்பட்டது.மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையம் கடந்த பன்னிரெண்டு ஆண்டு காலமாக இன மத பேதமின்றி சமாதான நீதிவான்களின் மேம்பாடு மற்றும் சமூக மேம்பாடு என்பவற்றை கருத்திற்கொண்டு செயற்ப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஆரம்பகால உறுப்பினர்களாக செயற்பட்டு சங்கத்தின் வளர்ச்சிப் பாதைக்கு அளப்பரிய பங்காற்றியமைக்காக சங்கத்தின் முன்னால் மற்றும் தற்போதைய உறுப்பினர்களுக்கு ,பொன்னாடை போர்த்தி,மலர் மாலை அணிவித்து, கௌரவிப்பினை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் அவர்களால் வழங்கி வைத்தார்.
இதன்போது,ஆரம்ப காலத் தலைவர் யோசப் இராஜேந்திரன் தவராசா (JP),ஆரம்ப கால பொருளாளரும் முன்னாள் தலைவருமான அல்ஹாஜ் பாவலர் சாந்தி முஹியித்தீன் (JP),முன்னாள் உப தலைவரும் அமைப்பின் வளவாளருமான அ.அன்பழகன் குறூஸ் (JP), முன்னாள் உப தலைவர் கதிராமத்தம்பி ஜெயசுந்தரம் (JP), ஆரம்ப காலச் செயலாளர் பாலிப்போடி இன்பராசா (JP) , முன்னாள் உப செயலாளரும் தற்போதைய உப தலைவருமான அல்ஹாஜ் முகமது யூசுப் ஆதம் (JP) , முன்னாள் செயலாளர் கந்தப்போடி தங்கராசா (JP) மற்றும் முன்னாள் பொருளாளரும் தற்போதைய பொருளாளருமான Dr.சபாரெத்தினம் சுதர்சன் (JP) என்போருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
சங்கத்தின் ஆரம்ப கால தலைவர்கள், உப தலைவர்கள், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட சங்கத்தின் நிருவாக சபை உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் பிரதேச இணைப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் போன்றோரும் கலந்து கொண்டனர்.
