மலையக தமிழ் பெண் நீதவானாக ஆனந்தவதனி தெரிவு பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்தில்

486005865_973186158292419_2121501516196408728_n.jpg

பதுளை மாவட்டத்தில் முதல் மலையக தமிழ் பெண் நீதவானாக ஆனந்தவதனி தெரிவு பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகச் சேவையாற்றிய சட்டத்தரணி ஆனந்தவதனி புஷ்பராஜ் நீதவானாக நியமனம் செய்யப்படவுள்ளார்.

இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நீதித்துறைக்கு நீதவானாக ஆட்சேர்க்கும் போட்டி பரீட்சையிலே சிறப்புச் சித்தி பெற்றுள்ளார்.

பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த பத்து வருடங்களாக பணியாற்றி வரும் இவர், பதுளை மாவட்டத்திலே மலையக தமிழ் மக்கள் சார்ந்து தெரிவு செய்யப்படும் முதலாவது நீதிபதியும், முதல் பெண் நீதிபதியும் ஆவார்.

தன்னுடைய ஆரம்பக் கல்வியை பசறை தமிழ்த் தேசிய கல்லூரியிலும் பின்னர் உயர்தர கல்வியை மட்டக்களப்பு வின்சன் மகளிர் தேசிய பாடசாலையிலும் நிறைவு செய்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பீடத்தில் சட்டமானி பட்டத்தைப் பெற்றார்.

சட்டக் கல்லூரியிலே தனது தொழில்நிலை படிப்பை மேற்கொண்டதன் பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து பத்து வருடங்களாக பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்திலும் தொழில் நியாய சபை நீதிமன்றத்திலும் சேவையாற்றி மலையக மக்கள் சார்ந்து பல்வேறு வழக்குகளில் சட்டத்தரணியாக சேவை புரிகின்றார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *