வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் ஜீவன் தொண்டமான்

வேட்பு மனுக்கள் நிராகரிப்பின் பின்னணியில் சூழ்ச்சி – ஜீவன் தொண்டமான் எம்.பி கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று தெரியவருகிறது.

நிர்வாக தவறு இருக்குமென ஆரம்பத்தில் நினைத்தோம். காரணம் என்னவென்று வினவியபோது, இதன் பின்னணியில் சூழ்ச்சி ஏதும் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே, இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். நல்ல முடிவு கிட்டும் என நினைக்கிறோம். நீதிமன்றத்தை நம்புகிறோம். இவர்கள் வழங்கியுள்ள காரணம், ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில்தான் உள்ளது.

ஏனைய தொகுதிகளில் எமது நிலைவரம் சிறப்பாக உள்ளது. காங்கிரஸ் எப்போதும் கொடி கட்டி பறக்கும்.” – என்றார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *