துருக்கி அதிபர் எர்துவானின் அரசியல் எதிரி கைது – நாடெங்கும்

download-7-24.jpeg

துருக்கியில், தனது கட்சியால் அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, இஸ்தான்புல் மேயர் இமாமோக்லுவை அதிகாரிகள் கைது செய்தனர். அதையடுத்து, நாடெங்கிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

மதச்சார்பற்ற குடியரசு மக்கள் கட்சியைச் சேர்ந்த எக்ரெம் இமாமோக்லு, துருக்கி அதிபர் ரிசெப் தையிப் எர்துவானின் வலுவான அரசியல் போட்டியாளர்களில் ஒருவராகக் காணப்படுகிறார்.

அவர் ஊழல் மற்றும் பயங்கரவாதக் குழுவுக்கு உதவியதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டி, அவரை “குற்றவியல் அமைப்பின் தலைவர் என்ற சந்தேகத்திற்குரிய நபர்” என்று அழைத்தனர்.விசாரணையின் ஒரு பகுதியாக, பிற அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள் உள்பட நூறு பேரை போலீசார் கைது செய்தனர்.இதையடுத்து, இஸ்தான்புல் ஆளுநர் அலுவலகம், நகரில் நான்கு நாட்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இமாமோக்லு இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் “மக்களின் விருப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகள், பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் சுரங்க ரயில் நிலையங்களில் திரண்டு, அரசாங்கத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். இது பல ஆண்டுகளாகக் காணப்படாத மக்கள் சீற்றத்தின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது.

இதையடுத்து, துருக்கியின் மிகப்பெரிய நகரத்தில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்தான்புல் பல்கலைக்கழகத்திற்கு வெளியே கூட்டத்தைக் கலைக்க காவல்துறை மிளகுத்தூள் பயன்படுத்துவதை ராய்ட்டர்ஸ் செய்தி முகமை வெளிப்படுத்தியுள்ளது.

அங்குள்ள நகர மண்டபத்தின் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் கடும் குளிரிலும் திரண்டு, “எர்துவான், சர்வாதிகாரி!” மற்றும் “இமாமோக்லு, நீங்கள் தனியாக இல்லை!” என்று கோஷமிட்டனர்.அங்கு விதிக்கப்பட்டுள்ள நான்கு நாள் கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக இஸ்தான்புல்லில் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஆனால் இமாமோக்லுவின் மனைவி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள், மக்களை “குரல் எழுப்புமாறு” வலியுறுத்துவதால், நாடு முழுவதும் அதிகமான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

இஸ்தான்புல்லில் உள்ள பல தெருக்களிலும் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சில மெட்ரோ பாதைகளிலும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் இமாமோக்லு வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவை தனது வீட்டிற்கு வெளியே போலீசார் இருந்தபோது படம் பிடித்ததாக அவர் கூறியுள்ளார். அதில், துருக்கி மக்களுக்காகவும் “உலகளவில் ஜனநாயகம் மற்றும் நீதியை நிலைநிறுத்தும் அனைவருக்காகவும்” தான் “உறுதியாக நிற்பதாக” அவர் அவர் கைது செய்யப்பட்ட பின்னர், எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள, கையால் எழுதப்பட்ட குறிப்பு ஒன்றில், துருக்கி மக்கள் தனக்கு எதிரான “பொய்கள், சதிகள் மற்றும் பொறிகளுக்கு” பதிலடி கொடுப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து, எக்ஸ், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டோக் போன்ற சமூக ஊடக தளங்களுக்கான அணுகலை துருக்கி கடுமையாகக் கட்டுப்படுத்தியதாக பிரிட்டனை சேர்ந்த இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்ஃப்ளாக்ஸ் புதன்கிழமையன்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *