மனைவியுடன் காரில் சென்ற ரவுடியை வெட்டிக் கொன்ற கும்பல் – 3 பேரை சுட்டுப் பிடித்த போலீசார்!
ஈரோடு அருகே நெடுஞ்சாலையில் காரில் மனைவியுடன் சென்ற பிரபல ரவுடியின் கார் மீது மற்றொரு காரை மோதி விபத்து ஏற்படுத்தி, ரவுடியை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் தப்பியோடிய மூவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.சேலம் மாவட்டம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் ரவுடி ஜான். இவர், தனது மனைவி சரண்யாவுடன் திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வந்தார். ஜான் மீது பல்வேறு கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள ஜான், இன்று காலை தனது மனைவியுடன் திருப்பூரில் இருந்து சேலத்திற்கு காரில் சென்று விட்டு மீண்டும் திருப்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது பின்னால் மற்றொரு கார் மோதியுள்ளது. இதையடுத்து அந்தக் காரில் இருந்து இறங்கிய
�
கும்பல் ஜானை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், ஜான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சரண்யா படுகாயமடைந்து நசியனூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் எஸ்.பி ஜவகர் விசாரணை மேற்கொண்டார்.இதைத் தொடர்ந்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய சதீஷ், சரவணன், பூபாலன் ஆகிய மூவரையும் காலில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்துள்ளனர். தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க முற்பட்டபோது அரிவாள் வெட்டு
�
காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சித்தோடு காவல் ஆய்வாளர் ரவி மற்றும் முதல் நிலை காவலர் யோகராஜ் ஆகியோரை டிஐஜி சசிமோகன் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டார்.இந்நிலையில், வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஜான் உடல் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் ஜானின் உடலை கோவை சரக டிஐஜி சசிமோகன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
