இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம் கொல்கத்தாவில்

download-3-32.jpeg

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம் கொல்கத்தாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

போட்டிக்கான இடம், அட்டவணை எதுவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

மகளிர் உலகக் கிண்ண தொடருக்கான இடங்களைத் தெரிவு செய்ய ஒருங்கிணைப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 2025 – 2026ஆம் ஆண்டு உள்ளூர் போட்டிக்கான அட்டவணையும் குறித்த கூட்டத்தில் இறுதி செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் போது, மதுபானம், புகையிலை சம்பந்தமான விளம்பரங்களைத் தடை செய்யுமாறு அந்த நாட்டுச் சுகாதார அமைச்சு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையை அறிவுறுத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் இந்த கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *