18 March 2025 Tuesday. Pothikai.fm. *#இன்றைய_பஞ்சாங்கம்*
மேஷம்: இதுவரை இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். புதிய பாதை தெரியும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சிக்கலான சவாலான காரியங்களையும் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். சிக்கனம் தேவைப்படும் நாள்.
மிதுனம்
மிதுனம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
கடகம்
கடகம்: அனுபவ பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.
சிம்மம்
சிம்மம்: ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.
கன்னி
கன்னி: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருக்கு அசதி சோர்வு வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.
துலாம்
துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணபாடும் யாருக்கும் வாக்குறுதிகளை வங்காதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பயணங்கள் சிறப்பாக அமையும் வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.
தனுசு
தனுசு: சிலர் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
மகரம்
மகரம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
கும்பம்
கும்பம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும்.பண தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.
மீனம்
மீனம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
Astro.V.Palaniappan
#Gobichettipalayam
9942162388
தேதி
Date 4 – பங்குனி – குரோதி
செவ்வாய்
நல்ல நேரம்
Nalla Neram 07:30 – 08:30 கா / AM
04:30 – 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
Gowri Nalla Neram 10:30 – 11:30 கா / AM
07:30 – 08:30 மா / PM
இராகு காலம்
Raahu Kaalam 03.00 – 04.30
எமகண்டம்
Yemagandam 09.00 – 10.30
குளிகை
Kuligai 12.00 – 01.30
சூலம்
Soolam வடக்கு
Vadakku
பரிகாரம்
Parigaram பால்
Paal
சந்திராஷ்டமம்
Chandirashtamam உத்திரட்டாதி ரேவதி
நாள்
Naal சம நோக்கு நாள்
லக்னம்
Lagnam மீன லக்னம் இருப்பு நாழிகை 03 வினாடி 49
சூரிய உதயம்
Sun Rise 06:21 கா / AM
ஸ்ரார்த திதி
Sraardha Thithi சதுர்த்தி
திதி
Thithi இன்று இரவு 08:40 PM வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி
நட்சத்திரம்
Star இன்று மாலை 04:32 PM வரை சுவாதி பின்பு விசாகம்
சுபகாரியம்
Subakariyam சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்
