மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயம் தொல்பொருள் திணைக்களத்தின் பூமி அல்லது காணி உரிமை என்ற அடிப்படையில் அந்த ஆலயத்தினை விஸ்தரிப்பதற்கு பல இடையூறுகளை தொல்பொருள் திணைக்களம் முன்னிறுத்தியிருக்கின்றது. – பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய டொக்டர் சிறிநாத் எம்.பி
உலக நாச்சியார் ஆண்ட எமது பிரதேசத்தில்
உலக நாச்சியாரின் வரலாற்றையும், தொன்மையையும் பறைசாற்றும் எந்த ஒரு நடவடிக்கையும் தொல்பொருள் திணைக்களங்ளினால் இதுவரையும் முன்னெடுக்கப்படவில்லை.
மேலும் இவ்வகையான செயற்பாடுகள் வெறுமனே எமது மாவட்டம் மற்றும் மாகாணத்தை தழுவியுமல்லாமல், வடக்கு மாகாணம் வரையும் பரவி இருக்கின்றது.உடனடியாக அரசு இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்.
அவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தாமல் எமது தொன்மையையும், மரபுகளையும் பாதுகாக்காமல் வெறுமனே மத சமத்துவமற்ற ஒரு போக்கினை கடைப்பிடிக்குமானால், நாமும், எமது கட்சியும் இவ்வகையான செயற்பாடுகளை மிகவும் வன்மையாக எதிர்ப்போம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இன்று ( 17) இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இளையதம்பி சிறிநாத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் மிகவும் பேசும் பொருளாக இருந்த பல்கலைக்கழக பேரவைக்கு இதுவரை காலமும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் மரபு முறை மாற்றப்பட்டு பெரும்பான்மையினர் அதிகமாக உள்வாங்கப்பட்டதையும் உள்வாங்கப்பட்டதற்கான தனது கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துக் கொண்டார்.
