பிரதமர் மோதி – இசையமைப்பாளர் இளையராஜா சந்திப்பு
இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 8-ஆம் தேதி லண்டன் நகரில் சிம்ஃபொனி அரங்கேற்றம் செய்தார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை அவர் சந்தித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
