பங்குச்சந்தை மோசடி வழக்கு | கவுதம் அதானி விடுவிப்பு!
பங்குச்சந்தை மோசடி வழக்கில் அதிபர் கவுதம் அதானி, நிர்வாக இயக்குநர் ராஜேஷ் அதானி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட்
�
நிறுவனம் பங்குச்சந்தை விதிமுறைகளை மீறி வர்த்தகம் செய்து அதன்மூலம் ரூ.388 கோடி வருவாய் ஈட்டியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தீவிர மோசடிகளை விசாரிக்கும் அமைப்பு (எஸ்.எப்.ஐ.ஒ.) 2012-ஆம் ஆண்டு கவுதம் அதானி மற்றும் ராஜேஷ் அதானி மீது வழக்குப்பதிவு செய்திருந்தது. குற்றசதி, ஏமாற்றுதல் போன்ற குற்றச்சாட்டுகளின்கீழ் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. 2014-ஆம்
�
ஆண்டு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து கவுதம் அதானி, ராஜேஷ் அதானியை விடுவித்திருந்தது.ஆனால் 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செசன்சு நீதிமன்றம், மாஜிஸ்திரேட்டு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து தொழில் அதிபர்கள் 2 பேரும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் இருந்து கவுதம் அதானி, ராஜேஷ் அதானி ஆகியோரை விடுவித்து உத்தரவு தீர்ப்பு வழங்கியது.
