நாளை (மார்ச் 18) பூமிக்கு திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது. சுனிதா புட்ச்

download-45.jpeg

நாளை பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பும் புதிய திகதியை அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

கடந்த ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நாளை (மார்ச் 18) பூமிக்கு திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது.

நேற்று (16) அதிகாலை சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக இணைந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருடன் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரர், ரஷிய விண்வெளி வீரர் ஆகியோரும் பூமிக்கு திரும்பவுள்ளனர்.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவது தொடர்ந்து தாமதமாகி வந்தது.

இந் நிலையில், நாசா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி விண்வெளி வீரர்கள் நாளை உள்ளூர் நேரப்படி மாலை 5.57 மணிக்கு ஃபுளோரிடா கடற்பகுதி அருகே தரையிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *