அரசியல்வாதி ஒருவர் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் கொலை மிரட்டல்களால் நியூசிலாந்திற்கு

images-1-24.jpeg

இலங்கையைச் சேர்ந்த பெண் அரசியல்வாதி ஒருவர் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் கொலை மிரட்டல்களால் நியூசிலாந்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனக்கு கடுமையான உயிருக்கு ஆபத்தான மிரட்டல்கள் இருப்பதாக கூறி இலங்கையைச் சேர்ந்த பெண் அரசியல்வாதி, நியூசிலாந்திற்கு சென்றுள்ளார்.நியூசிலாந்தில் அகதி அந்தஸ்து
அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபர்கள் அவரது வீட்டிற்கு வந்து மிரட்டியதாகவும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து, 32 வயதான அவருக்கு தற்போது நியூசிலாந்தில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.அதேவேளை தனது அரசியல் வாழ்க்கையைத் தொடர வேண்டுமென்றால், ஒரு முக்கிய அரசியல்வாதியுடன் பாலியல் உறவு கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, பெண் அரசியல்வாதியை மிரட்டிய நபர் 2019-ல் இலங்கையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவர் என்றும் கூறப்படுகிறது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *