இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு 474,147 பரீட்சார்த்திகள்

download-4-26.jpeg

சாதாரண தரப்பரீட்சைதாரிகளுக்கான விசேட அறிவித்தல் இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு 474,147 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நாளை (17) நடைபெறவுள்ள சாதாரண தரப்பரீட்சை தொடர்பாக இன்று (16) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சைகள் ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தப் பரீட்சையில் 398,182 பாடசாலை பரீட்சார்த்திகளும் 75,968 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பங்குபற்றவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாளை ஆரம்பமாகவுள்ள இந்த பரீட்சைக்கு பரீட்சை மண்டபத்திற்கு தேவையற்ற பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்குமாறு பரீட்சார்த்திகளிடம் பரீட்சை ஆணையாளர் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, எந்தவொரு பரீட்சார்த்தியும் இந்த விதிகளை மீறினால், அது பரீட்சை பிழையாகக் கருதப்பட்டு, அதிகபட்ச ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அத்தகைய நபர் 05 ஆண்டுகளுக்கு பரீட்சைக்கு தடை விதிக்கப்படலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *