பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டா பகுதியில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் பகுதிக்கு, கடந்த 11ஆம் தேதி ஜாபர் எக்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலின் 9 பெட்டிகளில் 450 பயணிகள் இருந்துள்ளனர். இந்த ரயிலை பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் ‘பலுச் விடுதலை இராணுவம்’ (BLA) என்ற
�
பிரிவினைவாத அமைப்பு கடத்திச் சிறைப் பிடித்தது. முன்னதாக, அந்த ரயிலைக் கடத்துவதற்கு முன்பு தண்டவாளத்தை வெடிக்கச் செய்திருந்தது. அப்போது நடைபெற்ற தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பலுச் விடுதலைப் படையினர் தெரிவித்திருந்தனர்.மேலும், தங்கள் வசம் 214 பேர் பிணைக் கைதிகளாக இருப்பதாகவும், பாகிஸ்தான் சிறையில் இருந்து பலூச் ஆதரவாளர்களை 48 மணி நேரத்திற்குள் விடுவிக்க வேண்டுமெனவும் கிளர்ச்சியாளர்கள் எச்சரித்திருந்தனர்.
�
ஆனால், இந்த ரயிலை பாகிஸ்தான் ராணுவத்தினர் மீட்டதாக பின்னர் செய்திகள் வெளியாகின. இருதரப்பினர் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 33 தீவிரவாதிகளைக் கொன்று பயணிகள் மீட்கப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்திருந்தது. ஆனால் இதுகுறித்த எந்த வீடியோக்களையும் புகைபடங்களையும் அது வெளியிடவில்லை. இதனால், அப்போதே பலரும் சந்தேகத்தை எழுப்பியிருந்தனர்.இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம் கூறியது பொய்யானவை என்று கூறி பலுச் விடுதலைப் படை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்,
�
பாகிஸ்தானின் ரயிலைக் கடத்திய பிரிவினைவாத அமைப்பான பலுச் விடுதலைப் படை 214 பணயக்கைதிகளையும் கொன்றதாக கூறியுள்ளது. பாகிஸ்தான் சிறையில் உள்ள தங்கள் குழுவினரை விடுவிக்க வலியுறுத்தியிருந்ததாகவும் ஆனால் அதுகுறித்து பேச அரசுத் தரப்பில் யாரும் முன்வராததால் 48 மணி நேர கெடு முடிந்த நிலையில் பிணையக்கைதிகளில் இருந்த 214 ராணுவ வீரர்களையும் கொன்று விட்டதாக பலுசிஸ்தான் விடுதலைப்படை தெரிவித்துள்ளது.
�
அதாவது, கொல்லப்பட்ட 214 பணயக்கைதிகளும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் என பலுச் விடுதலைப் படை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசு தங்களது கோரிக்கைகளைப் புறக்கணித்து வருகிறது. பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதையும் தவிர்த்தது. இதன் காரணமாகவே பாகிஸ்தான் ராணுவம் தங்களது ராணுவ வீரர்களை இழந்துள்ளது என அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளது.இதுதொடர்பாக் பலுச் விடுதலைப் படை செய்தித் தொடர்பாளர் ஜியான் பலோச், ”பாகிஸ்தான் பிடிவாதத்தின் விளைவாக, 214 பணயக்கைதிகளும் கொல்லப்பட்டனர். இது பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஒரு பெரிய தோல்வி” எனத் தெரிவித்துள்ளார்.
