திருக்குறள், 28 இந்திய மொழிகள், 35 உலக மொழிகளில் ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பேசப்படும், 28 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்க, பலநாட்டு பதிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்.இதைத் தொடர்ந்து, 45 பல்வேறு சர்வதேச மொழிகளில் கூடுதலாக
�
மொழி பெயர்க்கப்பட்டால், ஐ.நா., சபையால் அங்கீகரிக்கப்பட்ட, 193 உலக நாடுகளில், அனைத்து அலுவலர் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட நுால் என்ற பெருமை திருக்குறளுக்கு கிடைக்கும்.இதை அடுத்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், பிற கல்வி
�
நிறுவனங்களுடன் இணைந்து நிறைவேற்றும் வகையில், 133 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழர்கள் வாழும் இந்திய நகரங்களில் உள்ள பள்ளிகள், உலகத்தமிழ் மையங்களில் படிக்கும் மாணவர்களும் பங்கேற்கும் வகையில், கணினிவழி தேர்வு முறையில், ‘உலகத் தமிழ் ஒலிம்பியாட்’ போட்டி நடத்தப்படும்.
மாநில, தேசிய, சர்வதேச அளவில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்க, மொத்த பரிசுத் தொகையாக, 1 கோடி ரூபாய் வழங்கப்படும்.
