தேசிய அளவில் விவாதப்பொருளாகியுள்ள ’ரூ’… ரூபாய் குறியீடு ’₹’ உருவானதன் பின்னணி என்ன?
ரூபாய் குறியீட்டை உருவாக்கி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த உதயகுமாரை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.தமிழ்நாட்டு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் ரூபாய்
�
என்பதற்கான வழக்கமான குறியீடு இல்லாமல் ரூ என தமிழில் இருந்தது விவாதப்பொருளாகியுள்ளது. இந்நிலையில், ரூபாய் குறியீட்டின் பின்னணி என்ன என தற்போது பார்க்கலாம்.அமெரிக்க டாலர் இங்கிலாந்து பவுண்டு ஐரோப்பிய யூரோ ஜப்பான் யென் என ஒவ்வொரு நாட்டு பணத்திற்கும் தனித்த குறியீடு உள்ளது. அதேபோல இந்திய ரூபாய்க்கும் பிரத்யேகமாக ஒரு குறியீடு தேவை என கருதிய அரசு அதற்காக ஒரு போட்டி நடத்தியது. இதில் உதயகுமார் என்ற தமிழக இளைஞர் அளித்த
�
வடிவமே தேர்வு செய்யப்பட்டது. 2010ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அக்குறியீடே தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.என்ற தேவநாகரி எழுத்தை அடிப்படையாக கொண்ட இந்த ஒற்றை குறியீட்டின் பின்னணியில் பல சிறப்புகள் உள்ளன. வெளிநாடுகளின் எழுத்து வடிவம் கீழ் வரியை அடிப்படையாக கொண்டுள்ள நிலையில் பல இந்திய மொழிகளின் ஆதாரமான தேவநாகரி மொழி வடிவம் மேல் வரியை அடிப்படையாக கொண்டுள்ளது. அதாவது எழுத்துகளில் மேல்புறத்தில்
�
கிடைமட்டக்கோடு இருக்கும்.அதுதான் ரூபாய் குறியீட்டிலும் உள்ளது. இந்த வடிவம் இந்திய தன்மையை உணர்த்துவதாகவும் உள்ளது. மேலும் இக்குறியீட்டில் உள்ள இரு கிடைமட்டக்கோடுகள் இடையே உள்ள வெள்ளை நிறம் இந்திய தேசியக்கொடியை குறிப்பதாகவும் கருதலாம். மேலும் இரு கிடைமட்டக்கோடுகள் சமம் என்ற சமத்துவத்தை அதாவது சமநிலை கொண்ட பொருளாதாரத்தை குறிப்பதாகவும் உள்ளது. ரூபாய் குறியீட்டை உருவாக்கி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த உதயகுமாரை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி பாராட்டுகளை தெரிவித்திருந்தார்,
