ரூபாய் ( ₹ ) குறியீடு என்பது சர்வதேச அளவில் இருக்கும் பல கரன்சி குறியீடுகளுக்கு இணையாக இந்திய திருநாட்டிற்கு ஒரு குறியீடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் எனவும், இது அமெரிக்க டாலரின் குறியீட்டுக்கு போட்டியிடுவதற்கு தான் தவிர தமிழ்நாட்டோடு போட்டியிடுவதற்கு அல்ல என்பது ஸ்டாலினுக்கு தெரியுமா? என பாஜக
�
பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ்நாடு அரசின் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணி முதல் 1 மணி வரை சட்டப்பேரவையில் பட்ஜெட்டை நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார்.முன்னதாக நேற்று பட்ஜெட்டிற்கான இலச்சினையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். அதில், ‘சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும்
�
வகையில் தமிழகத்தின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட’ என்ற வாசகத்துடன், “2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, எல்லார்க்கும் எல்லாம்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அதில், தமிழ்நாடு பட்ஜெட்டில் இந்திய ரூபாய் ( ₹ ) குறியீடுக்கு பதிலாக ‘ரூ’ என்ற இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளது. மும்மொழிக்கொள்கை விவகாரம் மற்றும் இந்தி திணிப்பு விவகாரம் மீண்டும் விவாதப்பொருளாகியிருக்கும் நிலையில், தமிழக அரசு ரூ இலச்சினையை பயன்படுத்தியது தேசிய அளவில் கவனம் பெற்றது. இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலர்
�
கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரூபாய் ( ₹ ) குறியீடு என்பது சர்வதேச அளவில் இருக்கும் பல கரன்சி குறியீடுகளுக்கு இணையாக இந்திய திருநாட்டிற்கு ஒரு குறியீடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் எனவும், இது அமெரிக்க டாலரின் குறியீட்டுக்கு போட்டியிடுவதற்கு தான் தவிர தமிழ்நாட்டோடு போட்டியிடுவதற்கு அல்ல என்பது ஸ்டாலினுக்கு தெரியுமா? என பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2010 ல் உங்கள் திமுக மத்திய ஆட்சியில் இருந்த போது தான் ரூபாய் கான இந்த குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?அப்போதெல்லாம் நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதாவது
�
உங்களுக்குத் தெரியுமா? ரூபாய் என்ற வார்த்தை மூலச் சொல் தமிழ் அல்ல அது சமஸ்கிருத வார்த்தை என்பது உங்களுக்கு தெரியுமா? இப்போது அதைத்தானே பயன்படுத்த முன் வந்திருக்கிறீர்கள். சத்தியமேவ ஜெயதே என்ற உபநிடத முழக்கம் தான் நீங்கள் அரசு முத்திரைகளில் பயன்படுத்தும் வாய்மையே வெல்லும் என்கிற வாசகம்!!! உபநிடதம் ஹிந்துத்துவா இல்லையா? அதை இனிமேல் பயன்படுத்த மாட்டோம் என்று சொல்ல உங்களால் முடியுமா? சிங்கங்களை கொண்ட அரச முத்திரை என்பது அசோகரின் சின்னம் என்பது உங்களுக்கு தெரியுமா? நம் தேசிய கீதம் ஜன கன மன வங்க மொழியில் பாடப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா ?அது தமிழ் இல்லை என்பதால் உங்கள் திமுக அரசாங்கம் தேசிய கீதத்தை புறக்கணிக்க முடியுமா? இதற்கு உங்களிடம் இருந்து பதில் நான் எதிர்பார்க்க மாட்டேன்.. ஏனென்றால் நாங்கள் எழுப்பும் எந்த கேள்விக்கும் உங்களிடம் பதில் இல்லை என்பது எங்களுக்கு தெரியும்” என கூறியுள்ளார்.
