ட்ரம்ப் பதவியேற்புக்குப் பிறகு 200 பில்லியன் டாலரை இழந்த 5 கோடீஸ்வரர்கள்!

download-1-28.jpeg

டெஸ்லா விற்பனை 70% சரிவு; ட்ரம்ப் பதவியேற்புக்குப் பிறகு 200 பில்லியன் டாலரை இழந்த 5 கோடீஸ்வரர்கள்!

உலகிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்டவராக இருக்கும் எலான் மஸ்க் இந்த 7 வாரத்தில் தனது சொத்து மதிப்பில் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளார்.அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றதை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். அவரது பதவியேற்புக்காக பில்லியனர்கள் பலரும் தங்களது டாலர்களைக் கொட்டினர். அதிபர் தேர்தலுக்கும் ட்ரம்பின் பதவியேற்புக்கும் இடைப்பட்ட காலம் உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது என்றே கூறலாம்.ஆனால், தற்போது அதில் சில பில்லியனர்களுக்கு தலைகீழ் மாற்றத்தைத் தந்துள்ளது. ஜனவரி

20ஆம் தேதி பதவியேற்றியபோது அவருடன் இருந்த 5 பெரும் பணக்காரர்கள், தற்போது தங்களுடைய சொத்து மதிப்பில் பெரும் இழப்பை எதிர்கொண்டு உள்ளனர். ட்ரம்ப் வந்துவிட்டார் இனி அமெரிக்கா பொருளாதாரம் புதிய வேகத்தில் உயரும் என நம்பிக்கை அனைவரிடத்திலும் இருந்தது. இதன் காரணமாக அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து அதிகப்படியான பங்குகளை விற்பனை

செய்து முதலீட்டை வெளியேற்றினர். ஆனால் கடந்த 7 வாரத்தில் அமெரிக்கப் பணக்காரர்களின் நிலை மொத்தமும் மாறியுள்ளது.எலான் மஸ்க்
உலகிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்டவராக இருக்கும் எலான் மஸ்க் இந்த 7 வாரத்தில் தனது சொத்து மதிப்பில் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளார். எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பில் பெரும் பகுதியாக இருப்பது டெஸ்லா பங்கு மதிப்புதான். ஆனால் கடந்த 7 வாரத்தில் அவரது சொத்து மதிப்பு 148 பில்லியன் டாலர் அளவுக்குக் குறைந்துள்ளது.

ஐரோப்பிய சந்தையில் ஜெர்மனியில் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டெஸ்லா விற்பனை 70% சரிந்துள்ளது. சீனாவில் பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 49% குறைந்து. இதுவும் அவருடைய சொத்து மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக மாறியுள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *