தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் மறுத்து வருகின்றனர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

download-2-21.jpeg

இலங்கை கடற்பரப்பு பாலைவனமாவதைத் தவிர்க்க வேண்டும் என்றால், இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை கடற்றொழில், நீரியல்வள, கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கின்றார். ஆனால், இதுபோன்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் மறுத்து வருகின்றனர்.

தமிழக மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணத்தை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் இதன்போது வெளிப்படுத்தினார்.
இந்தியா-இலங்கை மீனவப் பிரச்னை, மிக முக்கியமான பிரச்னையாகக் காணப்படுகின்றது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு வழங்குவதற்கான பாரிய பொறுப்பு உங்கள் வசம் காணப்படுகிறது. இது தற்போது எவ்வாறான நிலைமையில் காணப்படுகின்றது?இலங்கை இந்தியா இடையிலான மீனவப் பிரச்னை என்பது மிக நீண்ட நாட்களாக புரையோடிப் போயுள்ள பிரச்னையாகக் காணப்படுகின்றது.

இதைத் தீர்ப்பதற்காக அல்லது இணக்கப்பாட்டிற்கு வருவதற்காகக் கடந்த காலங்கள் முழுவதுமே இங்கிருக்கின்ற மீனவர்கள், மீனவ சங்கங்கள், அரசியல்வாதிகள் எல்லோருமே பல்வேறு பேச்சுவார்த்தைகள் அல்லது உடன்படிக்கைகளைச் செய்துகொண்ட போதிலும்கூட எந்தவித இணக்கப்பாடும் இல்லாது தொடர்ச்சியாக இந்திய மீனவர்களின் அத்துமீறல் இடம்பெற்று வருகின்றது.

அத்துமீறல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதன் காரணமாக இன்று அது திருப்புமுனையாக மாறியுள்ளது என நான் நினைக்கின்றேன்.

அதற்குக் காரணம் என்னவென்றால், எங்களுடைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு மீன்பிடி அமைச்சராகப் பொறுப்பேற்றதன் பிறகு அது மாத்திரமல்ல, கடந்த பொதுத் தேர்தலில் ஜனாதிபதித் தேர்தலில் எங்களுக்கு கணிசமான மக்கள் வாக்களித்தார்கள்.யாழ் மாவட்டத்திலும் எங்களை முதலாவது கட்சியாக மக்கள் உயர்த்தி வைத்திருக்கின்றார்கள். அந்த வகையில் எங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது. எங்களை நம்பிய மக்களுக்கு நாங்கள் துரோகம் செய்ய முடியாது. மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். அதை நோக்கிய நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.

அந்த வகையில் மீனவர்களுடைய பிரச்னை தொடர்பில் பல தடவை சொல்லியிருப்பேன். பெருமளவான மீனவர்கள் என்னிடம் சொல்வது ஒன்றுதான். முடியுமானால், இந்த இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்துங்கள். தடுத்து நிறுத்த முடியாவிட்டால் நாங்கள் எல்லோருமே இந்தக் கடலில் குதித்து செத்துப் போகின்றோம் என்ற வார்த்தையைப் பல மீனவர்கள் என்னிடம் சொல்லியிருக்கின்றார்கள்.அந்த அளவுக்கு இன்றைக்கு இது உச்சக்கட்டமான பிரச்னையாக இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் இந்திய அரசிடமும் சரி, தமிழ்நாட்டு அரசிடமும் சரி, நாங்கள் மிக மிக வினையமாகக் கேட்டுக்கொள்வது,

எங்களுடைய கடற்பரப்பு, இது சர்வதேச ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்ட கடல் பரப்பு, இலங்கைக்குச் சொந்தமான கடல். இந்தக் கடல் எல்லையை மீற வேண்டாம், தாண்ட வேண்டாம் என்று இந்திய மீனவர்களுக்குச் சொல்லும் படி,’ நாங்கள் தமிழ்நாட்டு அரசாங்கத்தையும், மத்திய அரசாங்கத்தையும் மிக மிக வினையமாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழக மீனவர்கள் தங்களுக்குப் பக்கத்தில் இருக்கின்ற கேரளா கடல் பரப்பிற்குச் செல்லமாட்டார்கள். ஆந்திராவுக்கு செல்ல மாட்டார்கள். பக்கத்தில் இருக்கின்ற பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார்கள்.ஆனால், எங்களுடைய கடற்பரப்புக்குள் வந்து முற்று முழுதாக எங்களுடைய மீன்வளங்களைக் கொள்ளையடித்து விட்டு, எங்களுடைய கடல் வளங்களை நாசம் செய்துவிட்டு, எங்களுடைய கடல் தொழிலாளர்களின் வலைகள், வளங்கள் எல்லாவற்றையும் நாசம் செய்துவிட்டு கொள்ளையடித்துக் கொண்டு, போகும் வழியில் நாங்கள் தொப்புள்கொடி உறவு என்று சொல்லிக் கொண்டு போகின்றார்கள்.

இதுதான் இன்றைக்கு இவர்களுடைய நிலைமை. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே எங்களுடைய கொள்கை. அதற்கான நடவடிக்கைகள் நகர்வுகளை நாங்கள் எடுத்து வருகின்றோம்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *