பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி கைது சர்வதேச குற்றவியல்

download-1-24.jpeg

விமான நிலையத்தில் வைத்து பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி கைது பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டெர்டே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது உத்தரவைத் தொடர்ந்து மணிலா விமான நிலையத்தில் வைத்து இன்று (11) கைது செய்யப்பட்டார்.

இவர் ஹொங்கொங்கிலிருந்து திரும்பியவுடன் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்தது.

“மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்” என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார், 2016-2022 ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய “போதைப்பொருளுக்கு எதிரான போர்” தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுட்டெர்டேவின் இந்த போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தில், அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி 6,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

ஆனால், மனித உரிமை அமைப்புகள் இந்த எண்ணிக்கை 30,000 வரை இருக்கலாம் என கூறுகின்றன, இதில் பலர் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணை, டுட்டெர்டே டாவோ நகர மேயராக இருந்த 2011 முதல், பிலிப்பைன்ஸ் 2019 இல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து விலகும் வரை நடந்த குற்றங்களை உள்ளடக்கியது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *