முன்னாள் ஜனாதிபதி ரணில் உள்ளிட்டோருக்கு எதிரான மனு மீதான விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமின் உறுப்பினரான நீதியரசர் மேனகா விஜேசுந்தர இன்று (10) குறித்த விசாரணையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு வெற்றிடங்கள் இருக்கும் போது நீதிபதிகளை நியமிக்காததன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சிலருக்கு எதிராக குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனக் டி சில்வா, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
