புலம்பெயர்ந்து வாழும் எங்கள் உறவுகளுக்கு யாழ் மண்ணில் இருந்து ஒரு குரல். அன்பான இரக்க குணம் படைத்த எம் உறவுகளே
நீங்கள் அங்கிருந்து யாழ் மண்ணில் மிகவும் வறியவர்களுக்கு உதவி செய்வது வரவேற்கத்தக்க விடையம் தான் ஆனால் அதை எப்படி செய்கிறோம் என்பது மிக மிக முக்கியமானது தயவுசெய்து நீங்கள் இடைத்தரகர்கள் மூலமாக பணம் அனுப்ப வேண்டாம் முடிந்தவரை உங்களது நேரடி கண்காணிப்பில் பணத்தை அனுப்புங்கள்
இடைத்தரகர்கள் தந்திரமாக செயல்படுகிறார்கள் குறிப்பாக ஒருவருக்கு உதவி செய்வதற்கு நீங்கள் ஒரு லட்சம் அனுப்பினால். இடைத்தரகர் நேரடியாக அவர்களிடம் போய் கூறுவார் உங்களுக்கு நாங்கள் ஐம்பதாயிரம் தான் தருவோம் ஆனா வீடியோ பதிவில் ஒரு லட்சம் தந்ததாக நான் கூறுவேன் நீங்கள் அதற்கு ஆமாம் போட வேண்டும் என்று. அவர்களும் வேற வழி இன்றி 50.000 ஆவது வரட்டும் எங்களுடைய கஷ்டம் தீரட்டும் என்று அதற்கு அவர்கள் தலையாட்டி விடுவார்கள்.
இது போன்ற பல தந்திரமான வேலைகளை செய்து வருகிறார்கள். ஒருவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் தொலைபேசி அழைப்பில் எவ்வளவு பணம் தந்தார்கள் என்று கேட்டால் இடைத்தரகர்கள் என்ன சொல்லி வைத்தாரோ அதையே உங்களுக்கு திருப்பி விடுவார்கள்.
புலம்பெயர்ந்த உறவுகளே வெளிநாடுகளில் குளிர் நாட்டில் நீங்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை. சரியானதை தேர்வு செய்யுங்கள் உங்களின் இரக்க குணத்திற்கு தலை வணங்குகிறோம் யாழ் மண்ணில் இருந்து ஒரு குரல்
