பாலியல் வன்கொடுமை செய்ததாக சீன வாலிபர் கைது இங்கிலாந்தில்

482324888_965107699100265_748665291136827168_n.jpg

பல பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் அறிமுகம் ஆகி, பெண்கள் பலரையும் அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சீன வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சீனாவை சேர்ந்த 28 வயதான ஜின்ஹவ் சுவா. இவர் இங்கிலாந்தில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்திற்கு 2017 ஆம் ஆண்டு படிக்க சென்றார். அப்போது ஜின்ஹவ் சுவா, ஆன்லைன் டேட்டிங் செயலிகள் மூலம் பல பெண்களுடன் அறிமுகம் ஆனார். மேலும் அவர் தொலைபேசி இலக்கங்களை பரிமாறி கொண்டு அந்த பெண்களுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

பின்னர் வீட்டிற்கு வருமாறு அழைத்து அந்த பெண்களை மது குடிக்க வைத்து, போதை ஏறியவுடன் அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை ஜின்ஹவ் சுவா வாடிக்கையாக கொண்டு இருந்துள்ளார். இதற்கிடையே ஜின்ஹவ் சுவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பொலிஸில் புகார் அளித்து உள்ளார்.

அந்த புகாரின்போில் பொலிஸார் விசாரணை நடத்தி வந்துள்ளனா். புகாரின் அடிப்படையில் ஜின்ஹவ் சுவாவை பொலிஸார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து தொலைபேசியை வைத்து அதனை ஆய்வு செய்தனர். அப்போது அதில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ஜின்ஹவ் சுவா, தனது தொலைபேசியில் 1,270 ஆபாச வீடியோக்களை வைத்து இருந்தார்.

அதாவது தான் பாலியல் வன்கொடுமை செய்யும் பெண்களை வீடியோ எடுத்து இருந்தது தெரிந்தது. இங்கிலாந்தில் மட்டும் 50 இற்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக சீனாவிலும் சேர்த்து 60 பெண்கள் வாழ்க்கையை அவர் நாசம் செய்து இருந்தது தெரிந்தது.

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் பழகி, பல பெண்கள் வாழ்க்கையை சீன வாலிபர் சீரழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *