அடுத்த 2 நாட்களுக்கு மழை வெளுக்கும்.. எந்த மாவட்டங்களில் தெரியுமா? வானிலை மையம் எச்சரிக்கை தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில், இன்று (மார்ச் 11) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி சென்னை மற்றும் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதேபோன்று டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
