நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

482219104_964411575836544_4044162240165684826_n.jpg

காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தி நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் வடக்கிலும், தெற்கிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான பொறிமுறை வலுப்படுத்தப்படும் எனவும் இந்த விடயத்தில் விசாரணை நடத்தி நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ”உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை சிறப்பாக நடைபெற்றுவருகின்றது. வெளியில் தெரியாவிட்டாலும் உள்ளே விடயங்கள் காத்திரமான நடைபெற்றுவருகின்றன.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி, தாஜுடீன் கொலை, லலித், குகன் காணாமல்ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எனவே, விசாரணைகள் தொடர்பில் குழப்பமடைய வேண்டாம்.

அதேவேளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இரு வருடங்களுக்கு முன்னர் இலங்கை தொடர்பில் தீர்மானமொன்று முன்வைக்கப்பட்டது. மனித உரிமை பாதுகாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. எனவே, மனித உரிமைகளை பாதுகாப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நிகழ்நிலை காப்பு சட்டத்தையும் மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளோம்.

நீதி, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சு என மூன்று அமைச்சுகளையும் உள்ளடக்கிய வகையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *