சிரியா உள்நாட்டு போர் ; 1000-க்கும் மேற்பட்டோர் பலி சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் சிரிய ஜனாதிபதி பஷர் ஆசாத்-க்கு ஆதரவானோர், பாதுகாப்பு படையினர் மற்றும் பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்ட கொலைகளில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பிரிட்டனை சேர்ந்த சிரிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி பொது மக்களில் 745 பேரும், அரசு பாதுகாப்பு படைடை சேர்ந்த 125 பேர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பஷார் ஆசாத்-இன் ஆதரவு கொண்ட ஆயுத படையை சேர்ந்த 148 பயங்கரவாதிகள் இந்த உள்நாட்டு பேரில் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கடலோர பகுதிகளான லடாகியா மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், பல இடங்களில் சிறிய ரக உணவகங்களும் மூடப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
