மாணவர்களுக்கு பிஸ்கெட் கொடுத்து மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்கிய பாஜகவினர்! வீடியோ கையெழுத்திட்ட மாணவர்களுக்கு ஆன்மீக பிரிவு துணைத் தலைவர் லியோ சுந்தரம் பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கினார்.மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சென்னை காரப்பாக்கத்தில் மாணவர்களுக்கு பிஸ்கெட் கொடுத்து கையெழுத்து வாங்கும் பாஜகவினரால்
�
அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை OMR சாலை, காரப்பாக்கத்தில் அமைந்துள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளி அருகில் மாநில ஆன்மீக பிரிவு துணைத் தலைவர் லியோ சுந்தரம் தலைமையில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது,
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு தலைவர் சக்கரவர்த்தி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.சரியாக பள்ளி விடும்
�
நேரத்தில் நிகழ்ச்சி துவங்கப்பட்டநிலையில், அப்பக்கம் வழியாக வரும் பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்த பாஜகவினர் மாணவர்களை கையெழுத்திடும்படி கூறினர். அப்பொழுது சில மாணவர்கள் TVK என கத்திவிட்டு கையெழுத்திடாமல் சென்றனர். அதை தொடர்ந்து சில பள்ளி மாணவ, மாணவிகள் பலகையில் கையெழுத்திட்டு சென்றனர், கையெழுத்திட்ட மாணவர்களுக்கு ஆன்மீக பிரிவு துணைத் தலைவர் லியோ சுந்தரம் பிஸ்கட் பாக்கெட்டுகளை
�
வழங்கினார்.இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஸ், ”பள்ளிக்கூடங்களின் வாசல்களில் போர்டு வைத்துக்கொண்டு, பள்ளிக்குள் நுழைய செல்லும் பிள்ளைகளின் கையைப் பிடித்து இழுத்து, மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக ‘வா வா வந்து கையெழுத்து போடு’ என இழுப்பதை ஏற்க முடியாது.இதெல்லாம் குழந்தைகளை அச்சுறுத்துவது என்றேதான் பார்க்கவேண்டி உள்ளது. துறை அமைச்சராக இதை கடுமையாக கண்டிக்கிறேன்; புகாரின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்
