மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் 14 இந்திய மீனவர்கள் கைது

download-5-10.jpeg

மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 14 பேரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாகக் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் அவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மன்னார் வளைகுடா அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்தாக சொல்லி 14 தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களின் ஒரு விசைப்படகையும் சிறைபிடித்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது

இடையில் சில காலம் மட்டும் கைது செய்யும் போக்கு குறைந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் சமீப காலங்களாகக் கைது நடவடிக்கை அதிகரித்துள்ளது. இதைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டமும் நடத்தி வருகிறார்கள். மேலும், தமிழக அரசு தரப்பிலும் இதுபோன்ற கைதுகளைத் தடுக்க இலங்கை அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்கள். இருப்பினும், மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. ராமேஸ்வரம் பாம்பன் மீனவர்களை இலங்கை கடற்படை அராஜகமாகக் கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாகச் சொல்லி 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.. மன்னார் தெற்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகச் சொல்லி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், அவர்கள் பயன்படுத்திய ஒரு விசைப்படகையும் சிறைபிடித்துள்ளனர்.

இப்போது கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விசைப்படகையும் மன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.


Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *