அரசாங்கம் ரணிலின் தொங்கு பாலத்திலே பயணிக்கிறது – நாம் மக்களை ஏமற்றியதில்லை – சஜித் பிரேமதாச ஒரு நாட்டின் இருப்பு செல்வத்தின் உருவாக்கத்தைப் பொறுத்து அமைகிறது.
உருவாக்கப்படும் இந்த செல்வ சுழற்சி பங்வேறு விதமாக அமைந்து காணப்படுகிறது.
சில அரசியல் கோட்பாடுகள் முதலாளிகளுக்கு மதிப்பளிக்கும் அதே வேளையில், மற்றும் சில உழைக்கும் தரப்புக்கு அதிகாரத்தை வழங்குகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
நாம் மனிதாபிமான முதலாளித்துவத்தையே பின்பற்றுகிறோம்.
ஒரு நாட்டின் இருப்புக்கு நிதி ஆற்றலும் செல்வ உருவாக்கமும் அவசியமாகும். இந்த செல்வ உருவாக்கம் சமூக சந்தை பொருளாதாரத்தில் தேவை வழங்கல் அடிப்படையில் நடக்கும் ஒழுங்கு இங்கு காணப்பட வேண்டும். சீனாவும் ரஷ்யாவும் இந்த அணுகுறையை ஏற்றுக்கொண்டுள்ளன.
உற்பத்தி செய்யப்படும் செல்வத்தை சமத்துவத்தை மையமாகக் கொண்ட மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் சமூகத்தின் சகல பிரிவினருக்கும் சமச்சீரான வழியில் பகிர்ந்தளிக்கும் திட்டமொன்றை இங்கு முன்னெடுக்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி மனிதாபிமான முதலாளித்துவத்தின் மூலம் செல்வத்தை உருவாக்கி, சமூக நீதியில் கவனம் செலுத்தி, சமூக நலனைப் பேணி, சமூக ஜனநாயக கோட்பாடுகளில் அமைந்த நடுத்தர பாதையையே பின்பற்றுகிறது. சாதாரண மக்கள் வாழ்வூட்டுகளை இது வழங்குகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சமூக ஜனநாயகத்தை பின்பற்றி வந்த ஐக்கிய தேசியக் கட்சியை தற்போதைய தலைவர்கள் தீவிர முதலாளித்துவத்தின் பக்கம் திருப்பியுள்ளனர்.
