நாங்கள் பிடிவாதமாக இல்லை: தெளிவாக இருக்கிறோம் தமிழை.முதலமைச்சர் ஸ்டாலின்

images-3-3.jpeg

நாங்கள் பிடிவாதமாக இல்லை: தெளிவாக இருக்கிறோம்; இன்னுயிர்த் தமிழை.முதலமைச்சர் ஸ்டாலின்!
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு உறுதியுடன் நிற்கும்: முதல்வர் ஸ்டாலின் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் ஸ்டலின் அன்றாடம் அறிக்கையை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், இன்றும் அவர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,மரம் வேண்டுமானால், அமைதியை விரும்பலாம், ஆனால்

காற்று அடங்காது.’ நாங்கள் எங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தபோது, ​​இதுப்போன்ற கடிதங்களையெல்லாம் எழுத எங்களை தூண்டியது மத்திய கல்வி அமைச்சர்தான். அவர் தனது இடத்தை மறந்து, ஒரு முழு மாநிலத்தையும் இந்தி திணிப்பை ஏற்கும்படி மிரட்டல் விடுத்துவருகிறார். அவர் ஒருபோதும் வெல்ல முடியாத போராட்டத்தை தூண்டி விட்டுள்ளார். அதற்கான விளைவையும் அவர் அனுபவித்து வருகிறார். இந்த மிரட்டல்களுக்கெல்லாம் தமிழ்நாடு உடன்படாது.

2030 ஐ நோக்கி கொள்கை வகுத்திருக்கும் இவர்களது NEP-ஐ நிராகரிக்கும் தமிழ்நாடு, அதன் பல இலக்குகளை ஏற்கனவே அடைந்துவிட்டது. இது ஒரு LKG மாணவர் PhD பட்டதாரிக்கு விரிவுரை வழங்குவது போல இருக்கிறது. திராவிடம் டெல்லியிலிருந்து கட்டளைகளை எடுப்பதில்லை. அதற்கு பதிலாக, அது தேசம் பின்பற்ற வேண்டிய பாதையை அமைக்கிறது.

இப்போது மும்மொழி சூத்திரத்திற்கான ஆதரவாக பாஜகவின் கையெழுத்து பிரச்சார சர்கஸ் தமிழ்நாட்டில் ஒரு நகைப்புக்குரிய விஷயமாக மாறிவிட்டது. முடிந்தால் இதை அவர்களின் முக்கிய நிகழ்ச்சி நிரலாகவும், இந்தி திணிப்பு குறித்த வாக்கெடுப்பாகவும் வைத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் இறங்கட்டும் என்று நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன்.

வரலாறு மிகவும் தெளிவாக உள்ளது. தமிழ்நாட்டின் மீது இந்தியைத் திணிக்க முயன்றவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் அல்லது பின்னர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி திமுகவுடன் இணைந்துகொண்டுள்ளனர். பிரிட்டிஷ் காலனித்துவத்திற்குப் பதிலாக இந்தி காலனித்துவத்தை தமிழ்நாடு என்றும் பொறுத்துக்கொள்ளாது.

திட்டங்களின் பெயர்கள் முதல் விருதுகள் வரை மத்திய அரசு நிறுவனங்கள் இந்தியை குமட்டல் தரும் அளவிற்கு திணிக்கின்றனர், இது இந்தியாவில் இந்தி பேசாமல் இருக்கும் பெரும்பான்மையானவர்களை மூச்சுத் திணறவைக்கிறது.

மனிதர்கள் வருவார்கள் போவார்கள் ( men may come, men may go) ஆனால் இந்தியாவில் இந்தியின் ஆதிக்கம் தகர்க்கப்பட்ட பிறகும் கூட, முன்னணிப் படையாக நின்றது திமுகதான் என்பதை வரலாறு நினைவில் கொள்ளும்.”

என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், நாங்கள் பிடிவாதமாக இல்லை: தெளிவாக இருக்கிறோம். இன்னுயிர்த் தமிழை எந்நாளும் காப்போம்!” என்ற தலைப்பில் இரண்டு பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் முழு அறிக்கையை காணலாம்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *