நான் கனடா மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் பொருளாதார ரீதியாக கனடா தற்போது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. மேலும், அமெரிக்க ஜனாதிபதயாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், கனடா பொருட்களுக்கு வரியை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது கனடா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கனடாவின் இடைக்கால பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ செயல்பட்டு வருகிறார்.
இந் நிலையில், பதவி விலகுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து தனது இறுதி உரையை நிகழ்த்தினார். அப்போது ஜஸ்டின் ட்ரூடோ கனடா மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்று உருக்கமாக பேசினார். தொடர்ந்து அவர் கூறியதாவது;-
“பிரதமர் அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும், நான் கனடா மக்களை முதன்மைப்படுத்தி, அவர்களுக்காக உழைத்தேன். மக்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது என்பதை உறுதிசெய்துள்ளேன். மக்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்பதை உறுதியாக சொல்கிறேன். எனது தலைமையிலான அரசாங்கத்தின் கடைசி நாட்களில் கூட, நான் கனடா மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்பதை கூற விரும்புகிறேன். ” என தெரிவித்துள்ளார்.
