சுங்க விதிகளின் படி வெளிநாடுகளில் இருந்து
சுங்க விதிகளின் படி வெளிநாடுகளில் இருந்து பெண் பயணி என்றால் 40 கிராம் தங்கம் அல்லது ரூ.1.00,000- மதிப்புக்கு மிகாத அளவுக்கு கொண்டு வர அனுமதி உள்ளதுவெளிநாடுகளில் இருந்து எவ்வளவு தங்க நகைகள் எடுத்து வரலாம்? சுங்க விதிகள் இதுதான்
மற்றொன்று ரெட் சேனல் என்று சொல்லப்படுகிறது. இது வரி விதிக்கப்படக்கூடிய அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருக்கும் பயணிகளுக்கான
வழியாகும். ஓராண்டுக்கும் மேல் வெளிநாட்டில் வசித்து இருக்க கூடிய இந்திய பயணிகள், 20 கிராம் தங்கம் எடுத்து வர அனுமதி உண்டு. ரூ.50,000 என்ற மதிப்புக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு வரி எதுவும் கிடையாது. ஆண் பயணி என்றால் இந்த விதிமுறை. பெண் பயணிகளுக்கு எவ்வளவு இதே பெண் பயணி என்றால் 40 கிராம் தங்கம் அல்லது ரூ.1.00,000- மதிப்புக்கு மிகாத அளவுக்கு கொண்டு வர அனுமதி உள்ளது. இந்திய வம்சாவளி நபர் அல்லது இந்தியாவுக்கு வர உரிய விசா வைத்து இருக்கும் பயணிகள் 6 மாத இடைவெளிக்குள் வராமல் அதற்கு மேல் வருபவர்களுக்கும் இது பொருந்தும். இவர்களை தவிர வேறு எந்த பயணிக்கும் தங்கள் உடமைகளில் தங்கம் கொண்டு வருவதற்கு அனுமதி கிடையாது. நகையாக இருந்தால் மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாது. தங்க கட்டிகள், தங்க காசுகளுக்கு சுங்கக் கட்டணம்
வசூல் செய்யப்படும். இந்திய அரசு வகுத்துள்ள இந்த வரையறைகளை தாண்டி இருந்தால் சுங்கக்கட்டணம் கட்டாயம் வசூலிக்கப்படும்.எவ்வளவு பணம் வைத்து இருக்கலாம்? இந்திய ரூபாயை கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்திய குடிமக்களாக இருந்தால் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் போது ரூ. 25 ஆயிரம் வரை கையில் ரொக்கமாக வைத்துக்கொள்ளலாம். சுங்க விதிகளின் படி, கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் கொண்டு வரும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, கடுமையான அபராதம் விதிக்கப்படும். கடுமையான வழக்குகளில் கைது செய்யப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்படும்.
